தமிழில் ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பது தொடர்பான அப்டேட்டை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது பகிர்ந்துள்ளார்.
