ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘ஒன் நேம்’ பாடல் வெளியீடு!

ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ஜெயிலர் முதல் பாகத்தை தொடர்ந்து உருவாகும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தில் இருந்து ‘ஒன் நேம்’ என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஒன் நேம்’ பாடலுக்கு சூப்பர் சுப்பு வரிகள் எழுதியுள்ள நிலையில், சோரஸ் பாடியுள்ளார். பாடல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஜெயிலர் 2 படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ‘அல்ல போலேலோ’ மற்றும் ‘ஒன் மூன்… ஒன் சன்’ பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ஒன் நேம்’ பாடலும் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply