சென்னையில் நடைபெற இருந்த “மீசைய முறுக்கு 2” திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராகவும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள ஹிப்ஹாப் ஆதி, தற்போது பிஸியாக பணியாற்றி வருகிறார்.
இன்று பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ரசிகர்களுடன் சந்திப்பு மற்றும் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் மாலுக்குள் திரண்டதால், பாதுகாப்பு சிக்கல்கள் உருவானதாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தலையிட்டு, நிகழ்ச்சியை தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியை நிறுத்தியது.
Video Link:
இதையடுத்து ஹிப்ஹாப் ஆதி சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் மனம் திறந்து பதிவிட்டுள்ளார். “உங்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காவல்துறையின் அறிவுறுத்தலின்படி என்னால் மேடையேற முடியவில்லை. உங்கள் அளவில்லாத அன்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்று உங்களுடன் #MeesayaMurukku2-ஐ கொண்டாட முடியாதது மிகுந்த வருத்தத்தை தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். என்று தெரிவித்துள்ளார்.
