யஷ் இரட்டை வேடத்தில் அசத்தும் “டாக்சிக்” டிரைலர் வெளியீடு!

‘ஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் “டாக்சிக்”. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டீஸர் ரசிகர்களிடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. அந்த வரிசையில், இன்று காலை 07:01 மணிக்கு படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்பட்டது.4 நிமிடம் 38 விநாடிகள் ஓடும் இந்த டிரைலரில், யஷ் அப்பா மற்றும் மகன் என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காதல், உணர்ச்சி மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர், அவரது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading