“குட் பேட் அக்லி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கு “டேர் டெவில்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.அடுத்ததாக, அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையை மையமாகக் கொண்ட “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்படமும் உருவாகி வருகிறது. இதை இயக்குநர் விஜய் இயக்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமான “மங்காத்தா”வின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்களும் பரவி வருகின்றன. வெங்கட் பிரபு இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும், 2027-ல் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவாவுடனும் ஒரு படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளாராம்.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கருடன் அஜித் முதல்முறையாக இணையவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. “டேர் டெவில்” மற்றும் “மங்காத்தா 2” படங்களை முடித்த பிறகு இந்த கூட்டணி உருவாகலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் ஷங்கர் முதலில் “வேள்பாரி” திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இதனிடையே தற்போது அஜித்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
