உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ள சங்ககிரி ராஜ்குமாரின் “ஒன் மேன்” திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்!

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “வெங்காயம்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். தற்போது அவர் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள புதிய படம் “ஒன் மேன்”. இந்தப் படம் சாதாரண திரைப்படமாக அல்ல, உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு திரைப்படத்தை உருவாக்க தேவையான 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் பணிகளை, எந்த உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை சங்ககிரி ராஜ்குமார் ஒருவரே மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைக்கதை, இயக்கம், நடிப்பு உள்ளிட்ட பல பொறுப்புகளை அவர் தனியாக ஏற்றுள்ளார்.

படத்தில் பரபரப்பான ஹெலிகாப்டர் துரத்தல் காட்சி, ஒரு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதும் விபத்து, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் இருந்து குதித்து உயிர் தப்பும் சம்பவம் போன்ற பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் வித்தியாசமாக, படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமார் தானே நடித்துள்ளார். மேலும், ஒவ்வொரு காட்சியும் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை தனி கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அந்த ‘மேக்கிங்’ காட்சிகளை படத்தின் இறுதியில் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.“ஒன் மேன்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading