மதுரையில் மீண்டும் தொடங்கும் “சேயோன்” படப்பிடிப்பு?

“அமரன்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “சேயோன்” படத்தில் நடித்து வருகிறார். “தாய் கிழவி” படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மதுரை மண்ணின் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் முழுமையான கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக தயாராகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் முடிந்த நிலையில், சிவகார்த்திகேயன் சில நாட்கள் ஊட்டியில் ஓய்வு எடுத்திருந்தார். தற்போது படத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய ஆக்‌ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் “சேயோன்” படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக ஊட்டியில் இருந்து சென்னை வந்த சிவகார்த்திகேயன், அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்று படக்குழுவுடன் இணைந்தார்.படக்குழு வெளியிட்ட தகவலின்படி, “சேயோன்” திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply