“டேர் டெவில்” படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்? வெளியான புது அப்டேட்!

நடிகர் அஜித் “குட் பேட் அக்லி” வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார் . அஜித்தின் 64-வது படமாக உருவாகிறது “டேர் டெவில்”. முதல் முறையாக அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், முழு படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் இந்தியா அளவில் உருவாகும் இந்தப் படத்தில் சில முன்னணி நடிகர்களை கேமியோ வேடங்களில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது என கூறப்படுகிறது. குறிப்பாக, மோகன்லால் மற்றும் வெங்கடேஷுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading