Advertisement

‘கஜினி’ பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகரும், ‘கஜினி’ படத்தின் வில்லனுமான பிரதீப் ராவத் (74) மும்பையில் காலமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் அவர். ‘லகான்’ திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட பிரதீப் ராவத், ‘கஜினி’, ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘வாத்தியார்’, ‘ஆம்பள’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருந்தார். மும்பையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply