சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ‘தலைவர் 173’ என்ற பெயரில் அறியப்பட்ட இந்தத் திட்டம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. பின்னர் சில காரணங்களால் அவர் திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய குஷ்பூ, “ஏதோ ஒரு காரணத்தால் சுந்தர்.சி அந்தப் படத்திலிருந்து விலகினார்; அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் .
