ஹோம்லி இமேஜிலிருந்து ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய அபர்ணதி!

சின்னத்திரை நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான அபர்ணதி, பின்னர் வெள்ளித்திரையில் தனது இடத்தை உருவாக்கிக் கொண்டார். ‘தேன்’, ‘ஜெயில்’, ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் இயல்பான நடிப்பால் அவர் கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியான ‘காளிதாஸ் 2’ படத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்படங்களைத் தாண்டி, அபர்ணதி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், அடிக்கடி புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

படங்களில் பெரும்பாலும் எளிமையான மற்றும் ஹோம்லியான தோற்றத்தில் தோன்றிய அவர், சமீப காலமாக மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading