‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை லிஜோ மோல், தற்போது மலையாளத்தில் வெளியான ‘உன்மதம்’ திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் தனது கதாபாத்திரத் தேர்வுகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதே மாதிரியான கதாபாத்திரங்களுடன் மீண்டும் அணுகுகிறார்கள். ‘ஜெய் பீம்’ தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தாலும், அதே வகை வேடங்களை தொடர்ந்து செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
‘பொன்மான்’ படத்தில் நடித்த ஸ்டெஃபி கிராஃப் கதாபாத்திரம் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், அது ‘ஜெய் பீம்’ கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது என்று அவர் கூறினார். ஒவ்வொரு நடிகரும் தங்கள் புதிய வேடம் முந்தையதை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.மேலும், ‘உன்மதம்’ படத்திலும் உணர்ச்சிப் பூர்வமான ஆழம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறிய லிஜோ மோல், எதிர்காலத்தில் ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
