பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திஷா பதானி, தமிழில் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்தார். தற்போது ‘அவராபன் 2’ மற்றும் ‘வெல்கம் டூ ஜங்கிள்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடைகளில் தோன்றி கவனம் ஈர்ப்பது திஷா பதானியின் வழக்கம். சமூக வலைதளங்களிலும் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், “கவர்ச்சி என்றாலே ஏன் இன்னும் தவறான பார்வையில் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. நடிகைகளுக்கு அது ஒரு வெளிப்பாட்டு வடிவம். ஆண்கள் உடலமைப்பைக் காட்டினால் அதை உழைப்பின் பலன் என்று பாராட்டுகிறார்கள்; ஆனால் பெண்கள் கவர்ச்சியாக தோன்றினால் உடனே விமர்சிக்கிறார்கள்” என்றார்.
மேலும், “இந்த மனப்போக்கு மாறினால்தான் சினிமா இன்னும் ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும். மாற வேண்டியது நடிகைகள் அல்ல, அவர்களை தவறாக மதிப்பிடும் பார்வைதான்” என்றும் திஷா பதானி கூறியுள்ளார்.
