கன்னட சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ஆனந்த் நாக், ஐந்து தசாப்தங்களாக திரைத்துறையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ‘கேஜிஎஃப்: Chapter 1’ படத்தில் கதையை விவரிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர். இயல்பான நடிப்பால் கன்னட திரையுலகில் தனக்கென நீண்ட கால அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக 1973 ஆண்டு வெளியான ‘சங்கல்பா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆனந்த் நாக், அதன் பிறகு ‘ஹம்சகீதே’, ‘சந்தனத கொம்பே’, ‘கணேஷனா மதுவே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். கன்னடத்தைத் தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பை பதிவு செய்துள்ளார். இதுவரை அவர் நடித்துள்ள 300-க்கும் அதிகமான படங்களில் சுமார் 250 திரைப்படங்கள் கன்னடத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து ஆனந்த் நாக் இந்த விருதைப் பெற உள்ளார். இதற்கு முன்னதாக, 2025-ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருதையும் அவர் பெற்றிருந்தார்.
