சமூக வலைதளங்களில் பரவி வந்த காதல் பிரிவு குறித்த வதந்திகளுக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் மறைமுகமாக பதிலளித்துள்ளார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசிய அவர், கடந்த ஆண்டு தனது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சவாலான காலமாக இருந்ததாக கூறியுள்ளார்.
துருவ் விக்ரமுடன் ‘பைசன் காளமாடன்’ படத்தில் இணைந்து நடிப்பதற்கு முன்பே , இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவின. சமூக வலைதளங்களில் அனுபமா பகிர்ந்த எமோஷனல் பதிவுகளும் அந்த வதந்திகளை மேலும் அதிகரித்தன.
இந்த நிலையில், இது என்னுடைய சமூக வலைத்தளப் பக்கம். அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். நான் எந்தவொரு ஆதங்கத்தையும் அல்லது கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. அந்தப் பதிவு ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மனமாற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றியது மட்டுமே. அதைச் செய்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சமூக வலைத்தளப் பதிவுகளைப் பார்த்துவிட்டு என் தனிப்பட்ட வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து கொண்டது போல் கற்பனை செய்யக் கூடாது. என்னைப் பற்றியோ, என் வாழ்க்கையைப் பற்றியோ மற்றவர்களுக்கு என்ன தெரியும்? என்றார். மேலும் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான காலமாக இருந்தது என்றும், தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மிகவும் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
