‘சிக்மா’ ரிலீஸுக்காக காத்திருக்கும் முதல்வர் விஜய்… தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 2ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது முதல் படத்தை இயக்கியிருப்பதால் ஜேசன் சஞ்சய் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், தனது தந்தை முதல்வர் விஜய் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ படத்தின் ரிலீஸுக்காக விஜய் காத்திருப்பதாகவும், தான் இயக்கியுள்ள படத்தை பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்க மாட்டார் என்றும் ஜேசன் தெரிவித்துள்ளார். படத்தின் விளம்பரங்கள் முழுவதும் ‘சிக்மா’வைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அவை தனது தந்தையை மையப்படுத்தியதாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது முதல்வராக விஜய்க்கு பல்வேறு பொறுப்புகள் இருப்பதால், அவற்றுக்கு மத்தியில் தனது முதல் படத்தை பார்க்க அவர் ஆவலுடன் காத்திருப்பதாக ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading