2022-ல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘வதந்தி’ வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் நடித்திருந்த அந்த தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆப் மணி’ என்ற பெயரில் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த சீசனையும் ஆண்ட்ரூ லூயிஸே இயக்கியுள்ளார். புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
இந்த முறை சசிகுமார் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, யஷ்வந்த், அனகா மருதோரா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த வெப் சிரீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எட்டு எபிசோட்கள் கொண்ட இந்த க்ரைம்-த்ரில்லர் தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
