இயக்குநராகவும் ஹீரோவாகவும் களமிறங்கும் வி.ஜே.சித்து… ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு!

யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமான வி.ஜே. சித்து, தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். ‘டயங்கரம்’ என்ற படத்தை அவர் எழுதி இயக்குவதுடன், அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசாரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

காமெடி, எமோஷனல் மற்றும் விறுவிறுப்பை கலந்த கதையாக உருவாகி வரும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply