‌அசாம் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் கார்த்திக் ஆர்யன்!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் நிவாரண உதவிகளுக்காக முன்வந்துள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், அசாம் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் கரைகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழங்கப்பட்டுள்ள நிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading