கோவையில் நடக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இசை விழா… ரசிகர்களுக்கு அப்டேட்

சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம், வயது வித்தியாசம் கொண்ட காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ராதிகா, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், டீசரும், சூர்யா பாடிய ‘வெட்டிங் சாங்’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading