இயக்குநராக கவனம் பெற்ற இளன், அவர் எழுதி இயக்கியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல், நட்பு, திருமணம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தப் படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவர வருகிறது.
நடிகை சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.
இந்தப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், படத்தின் நாயகன் மற்றும் நாயகி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் சிறப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
