மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், ஜீத் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துடக்கம்’ (Thudakkam) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்
சமீபத்தில் பேட்டியில் விஸ்மயா மோகன்லால் அளித்த பேட்டியில், என் எடை சுமார் 100 கிலோ இருந்தபோது படிக்கட்டில் ஏறுவதற்கே மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த அளவுக்கு உடல் சோர்வு இருந்தது. ஆனால் அதை வெளியில் சொன்னால் பலர் புரிந்துகொள்ளவில்லை” என்றார்.அதன் பின்னர் தாய்லாந்து சென்ற அவர், அங்குள்ள ‘பிட்கோ’ மையத்தில் ‘மு வே தாய்’ என்ற தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான பயிற்சி அது. கொரோனா காலத்தில் இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி தொடர்ந்து பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் 10 உதைகள் கூட முடியவில்லை. பின்னர் 30 உதைகள் வரை செய்யத் தொடங்கினேன்” என்று கூறினார்.
உடல் எடையை குறைப்பதே தனது முதன்மை நோக்கம் இல்லை என்றும், தாய்லாந்தின் வாழ்க்கை முறை, சுதந்திரமான சூழல் மற்றும் அங்கிருந்த அனுபவம்தான் தன்னை மாற்றியதாகவும் விஸ்மயா மோகன்லால் தெரிவித்துள்ளார்.
