தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்!

தென்னிந்திய திரையிசை உலகில் பல தலைமுறைகள் நினைவுகூரும் மூத்த பின்னணி பாடகி ஜமுனா ராணி நேற்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு 88 வயது. அவரது உடல் இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் இறுதி அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் ஜமுனா ராணி. 1938ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த அவர், வெறும் ஏழு வயதிலேயே “தியாகய்யா” திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். “நாயகன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலை பாடியவர் இவர்தான். இந்த பாடல் இன்றைய இளம் தலைமுறையினரையும் கவரும் ஒன்றா.

குழந்தைத்தனமும் இனிமையும் கலந்த குரலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜமுனா ராணி, தமிழில்( 1952) “கல்யாணி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காளை வயசு கட்டான சைசு”, “செந்தமிழ்த் தேன் மொழியாள்”, “பாட்டொன்று கேட்டேன்”, “சின்னச் சின்ன சிட்டு”, “காவேரி தாயே”, “உங்க மனசு ஒரு தினுசு”, “யாரடி நீ மோகினி”, “குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே”, “மாமா மாமா”, “ஆசையும் என் நேசமும்” உள்ளிட்ட பல வெற்றி பாடல்களௌ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading