உலகளாவிய வெளியீட்டுக்கு தயாரான ‘டாக்சிக்’.. கியாரா அத்வானியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் உருவாக்கி வரும் பிரமாண்ட பான்-இந்தியா திரைப்படம் ‘டாக்சிக்’. 1940 முதல் 1970 வரை கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல், மாஃபியா வலையமைப்புகள் மற்றும் குற்ற உலகின் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் முதலில் மார்ச் மாத வெளியீட்டுக்காக அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘டாக்சிக்’ ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புரமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதே நேரத்தில், டீசர் வெளியான பிறகு சில விவாதங்களும் உருவானது. இந்நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அவர் இப்படத்தில் ‘நாடியா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய லுக் ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading