சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்-ன் புதிய படத்தில் நடிக்கும் நடிகை யோகலட்சுமியின் BTS வீடியோ வெளியீடு!

இயக்குநராக அறிமுகமான முதல் முயற்சியிலேயே கவனம் பெற்றவர் அபிஷன் ஜீவிந். அவர் இயக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் நடிகராகவும் தனது பயணத்தை தொடங்கிய அவர், ‘வித் லவ்’ படத்தில் அனஸ்வரா ராஜனுடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது அபிஷன் ஜீவிந், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமாருடன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இந்தப் படத்தில் யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் மற்றும் யோக லட்சுமி இடம்பெற்றுள்ள பிடிஎஸ் வீடியோவை படக்குழு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஹார்ட் பீட்’ தொடரின் மூலம் பிரபலமான யோக லட்சுமி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply