இந்தியாவில் புதிய வரலாறு படைத்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’… என்ன தெரியுமா?

இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான முதல் நாள் வசூல் சாதனையில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் சாதனையை பின்னுக்குத் தள்ளி, ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்கை பதிவு செய்துள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இதில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்த புதிய படம் வந்துள்ளது.

ஸ்பைடர்மேன் திரைப்பட வரிசையின் நான்காவது பகுதியாக உருவாகியுள்ள இந்தப் படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. புதிய எதிரிகள், வேகமான அதிரடி காட்சிகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத் தரம் ஆகியவை உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், வெளியான முதல் நாளிலேயே ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72.44 கோடி மொத்த வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இருந்த அதிக முதல் நாள் வசூல் சாதனையை வைத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தை இது முந்தியுள்ளது. இந்த வசூல் சாதனை தற்போது இந்திய திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading