நட்பின் மகத்துவத்தை கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டாரின் அல்டிமேட் Friendship Day Binge Guide!

வாழ்க்கை எத்தனை சவால்களை வீசினாலும், உங்களுடன் உறுதியாக நிற்கும் நண்பர்கள் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். உங்களை சிரிக்க வைத்தும், மனம் உடைந்தபோது தோள் கொடுத்தும், உங்கள் எல்லா பலவீனங்களையும் அறிந்தும் உங்களுடன் நிற்பவர்களே உண்மையான நண்பர்கள்.

இந்த Friendship Day-யை முன்னிட்டு, சினிமாவின் மறக்க முடியாத நண்பர்கள் கூட்டங்கள், பிரிக்க முடியாத ஜோடிகள் மற்றும் கலகலப்பான ரூம்மேட்கள் இடம்பெறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஜியோஹாட்ஸ்டார் தொகுத்து வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து, உங்கள் நெருங்கிய நண்பர்களை அழைத்து, ஒரு அசத்தலான Binge-Watch-க்கு தயாராகுங்கள்!

1. சஞ்சு (Sanju)

நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய குழப்பம் வந்தாலும், நம்மை ஒருபோதும் கைவிடாத ஒரு நண்பர் அனைவருக்கும் தேவை. அப்படிப்பட்ட நண்பன்தான் கம்லி. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சஞ்சு’. உண்மையில் நட்புக்கான மிகச் சிறந்த அஞ்சலிகளில் ஒன்றாகும். போதைப் பழக்கம், சர்ச்சைகள், வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்கள் என அனைத்திலும் சஞ்சய்க்கு உறுதுணையாக நின்ற கம்லி, உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

2. ஹாரி பாட்டர் (Harry Potter)

பறக்கும் கார்கள், பிரம்மாண்ட சிலந்திகள், மந்திர உலகின் பரபரப்பான போர்கள் என சாகசங்கள் நிறைந்த ஹாரி பாட்டர். உண்மையான சக்தி மந்திரத்தில் அல்ல, நட்பிலும் விசுவாசத்திலும்தான் இருப்பதை உணர்த்துகிறது. ஹாரி, ரான், ஹெர்மயோனி ஆகியோரின் மறக்க முடியாத பயணத்தை மீண்டும் பார்க்கும் அனுபவம், ஹாக்வார்ட்ஸின் இனிய நினைவுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்வதோடு, நம் வாழ்க்கையின் உண்மையான மந்திரம் நம் நண்பர்கள்தான் என்பதை நினைவூட்டுகிறது.

3. சிச்சோரே (Chhichhore)

தேர்வு பயம் முதல் விடுதி வாழ்க்கையின் குறும்புகள் வரை, கல்லூரி வாழ்க்கையின் கலகலப்பை மிக இயல்பாக பதிவு செய்த திரைப்படம் ‘சிச்சோரே’. கிளாஸை கட் அடித்த நினைவுகள், மலிவான கேன்டீன் உணவுகள், நண்பர்களுக்கே உரிய வேடிக்கையான செல்லப்பெயர்கள் என வாழ்க்கையின் பொன்னான தருணங்களை மீண்டும் அனுபவிக்க வைக்கும் படம் இது. உங்கள் கல்லூரி நண்பர்களுடன் ஜங்க் ஃபுட் ஆர்டர் செய்து இந்த படத்தை ரசிக்க இதுவே சரியான நேரம்.

4. செக்ஸ் அண்ட் தி சிட்டி (Sex and the City)

“ஒருவேளை நம் தோழிகள்தான் நம் ஆன்மத் துணைகள்; ஆண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக வரும் மனிதர்கள் மட்டுமே.” கேரி பிராட்ஷாவின் இந்த புகழ்பெற்ற வசனம், இந்த தொடரின் மையக் கருத்தையே அழகாகச் சொல்கிறது. வேலை, காதல், வாழ்க்கை என எத்தனை சிக்கல்கள் வந்தாலும், அருகில் நம் தோழிகள் இருந்தால் அனைத்தையும் எளிதாகக் கடந்து செல்லலாம் என்பதை ஒவ்வொரு எபிசோடும் உணர்த்துகிறது. காதல் உறவுகள் மாறலாம்; ஆனால் உண்மையான தோழிகள் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதை நினைவூட்டும் சிறந்த தொடர் இது.

5. ஃபைண்டிங் டோரி (Finding Dory)

நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நமக்கான இடத்தை மீண்டும் கண்டுபிடிப்பது ஆகியவற்றைப் பற்றிய மனதை வருடும் கடல் சாகசப் பயணமே ‘Finding Dory’வாழ்க்கை எவ்வளவு ஆழமான சவால்களை முன்வைத்தாலும், உண்மையான நண்பர்கள் எப்போதும் நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை இந்த திரைப்படம் அழகாக உணர்த்துகிறது.

6. ஃபிரண்ட்ஸ் (Friends)

இந்த தொடரை நூறு முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் அது மனதிற்கு இதமான அனுபவமாகவே இருக்கும். Thanksgiving எபிசோடுகள், “Smelly Cat” பாடல், அபார்ட்மென்ட்டை பணயம் வைத்து நடக்கும் போட்டிகள் என சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இல்லாத தொடர் ‘Friends’. சிரிக்கவும், மன அழுத்தத்தை மறக்கவும், நம் வாழ்க்கையின் எல்லா ரகசியங்களையும் அறிந்த நண்பர்களை கொண்டாடவும் ஏற்ற மிகச் சிறந்த கம்ஃபர்ட் தொடர் இதுதான்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading