“24 கலைகளும் கற்பிக்கும் திரைப்படக் கல்லூரி வேண்டும்… முதல்வர் விஜய்க்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கை!

‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்ரன், பின்னர் பிரேமம் திரைப்படத்தால் பெரிய வரவேற்பைப் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரித்விராஜ் நடித்த கோல்டு படத்தை இயக்கியிருந்தார்; அந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துகளை பகிரும் அல்போன்ஸ் புத்ரன், இந்த முறை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நோக்கி முகநூலில் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “திரைப்படத் துறையின் 24 கலைகளையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் புதிய திரைப்படக் கல்லூரி தொடங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் பல கல்வி நிறுவனங்களில் 4 அல்லது 5 துறைகள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன என்றும், சினிமாவை முழுமையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பதிவின் இறுதியில், “நன்றி முதலமைச்சர் சார் என குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading