‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரிஷப் ஷெட்டிக்கு, மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘Leadership in Cinema’ திரைப்படத்தில் தலைமைத்துவம்) என்ற உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
திரைக்கதை எழுதி, இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்த ‘காந்தாரா’ அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ மற்றும் தற்போது உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் 36 மொழிகளில் 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த விழாவில் ரிஷப் ஷெட்டி நடுவராகவும் பங்கேற்கிறார்.உள்ளூர் கலாசாரத்தை உலக மேடையில் கொண்டு சென்றதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக விழா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிஷப் ஷெட்டி, “நமது பாரம்பரியக் கதைகள் உலகம் முழுவதும் மக்களைத் தொட முடிகிறது என்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்த கவுரவத்தை பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
