சந்தோஷ் பிரதாப், பவ்யா, பூஜிதா நடித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தை மலர் விழி நடேசன் இயக்கியுள்ளார். இது அவரது இரண்டாவது படம்.படம் குறித்து பேசிய அவர், “சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் காரில் சில நிமிடங்கள் காத்திருந்தபோது இந்தக் கதையின் கரு உருவானது.
அதாவது 11:30 மணிக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, அந்தச் சம்பவம் அவனை எவ்வாறு மாற்றுகிறது என்பதையே திரில்லர் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
சந்தோஷ் பிரதாப் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், பூஜிதா காதலியா மனைவியா என்பது சஸ்பென்ஸ் என்றும், பவ்யாவின் கதாபாத்திரமும் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றும் இயக்குநர் குறிப்பிட்டார். இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
