‘ஜெயிலர் 2’ படத்தில் ‘போதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படக்குழு தற்போது ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா இடம்பெறும் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் ‘போதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பாக நேற்று வெளியான அறிமுக வீடியோவில் சுராஜ் வெஞ்சரமூடு இடம்பெற்றிருந்தார். அவர் ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading