அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி டிரெண்ட்!

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ள ‘டேர்டெவில்’ திரைப்படம் அவரது 64வது படமாக உருவாகி வருகிறது. அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இதற்கிடையே, அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை பதிவு செய்யும் வகையில் ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அஜித்தின் பந்தயப் பயணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களை மையமாகக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கவனம் கிடைத்து வரும் நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

—

Add a Comment

Leave a Reply