‘எனக்கு எந்த பிரச்சினையும்‌ கிடையாது– இன்ஸ்டாகிராமில் மனம் திறந்த ஆத்மிகா!

நடிகை ஆத்மிகா சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகள் குறித்து ரசிகர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். தனது எண்ணங்களை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “என் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து வந்த எண்ணங்களையே பகிர்கிறேன். அதை பார்த்து நான் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “யாருக்காவது உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அந்த பதிவுகளை பகிர்கிறேன். நாம் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்வது எளிதல்ல; அதற்கு நிறைய தைரியம் தேவை” என்றும் அவர் கூறியுள்ளார்.ஆத்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading