துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ மூலம் கவனம் பெற்ற நஹாஸ் ஹிதாயத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஆண்டனி வர்கீஸ், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குநர் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இசையை ஜேக்ஸ் பிஜோய் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படம் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட திரில்லர் கதையுடன் உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply