எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ டிரெய்லர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘டிசி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் அவர் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. குறிப்பாக டிசி படத்தின் இசை ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், படத்தின் அனைத்து 15 பாடல்களையும் முழுமையான ஆல்பமாக அனிருத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, ‘டிசி’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‌இயக்குனராக வெற்றிப் பயணத்தை தொடர்ந்த லோகேஷ், இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாவது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading