‘மீசைய முறுக்கு 2’ படத்தின் ‘போடா படிச்சிருக்கேன்’ என்ற 6வது பாடல் வெளியீடு!

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கயை தழுவி கற்பனை கதைக்களத்தில் உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் அவர் இரட்டை வேடங்களில் தோன்றியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

சுந்தர் சி மற்றும் குஷ்பு இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சைத்ரா, கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே வெளியான ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தின் 6வது பாடலான ‘போடா படிச்சிருக்கேன்’ தற்போது வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

—

Add a Comment

Leave a Reply