ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சியான் 63’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படம் தற்போது அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ‘இருமுகன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை ரியா ஷிபு தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். அவருடன் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரியா ஷிபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.கதாபாத்திரத்திற்காக விக்ரம் தனது உடலமைப்பில் பெரிய மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது புதிய தோற்றம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
