சூர்யா – ஜோதிகா கூட்டணி மீண்டும் எப்போது திரைக்கு வரும் என்ற கேள்வி ரசிகர்களிடம் நீண்ட காலமாக உள்ளது. ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் பிடித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜோதிகாவிடம், “சூர்யாவுடன் மீண்டும் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?” என்று தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜோதிகா, “நாங்கள் இருவரும் நல்ல கதைக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எங்களை மீண்டும் இணைக்க வேண்டிய அளவுக்கு மனதில் நிற்கும் ரொமான்டிக் கதை யாரும் சொல்லவில்லை” என்றார்.
மேலும் அவர், “தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகள் குறைந்து விட்டன. கடந்த 15 ஆண்டுகளாக உண்மையான ரொமான்ஸ் படங்களை அதிகம் பார்க்கவில்லை. இப்போது பல படங்களில் காதலைவிட காமமே அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். “காதலை மென்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லும் ஒரு படம் கிடைத்தால் நிச்சயமாக சேர்ந்து நடிப்போம். அந்த மாதிரியான படத்தை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் தான் அது இன்னும் இயல்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் ஜோதிகா கூறினார்.
