சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால், ஒரு படப்பிடிப்பு இடைவேளையின் போது கேரவனுக்குள் ஓய்வெடுத்து கொண்டிருந்ததாகவும், அப்போது அனுமதியின்றி உள்ளே வந்த உதவி இயக்குநர் ஒருவர் தனது மேலாடையை கழற்றி, நெஞ்சில் “காஜல்” என்று பச்சைகுத்தியிருப்பதை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் தன்னை கடும் அதிர்ச்சியடையச் செய்ததாக கூறிய அவர், அது அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும், ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்குள் அனுமதி இல்லாமல் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த நபரை எச்சரித்து வெளியே அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
Add a Comment
