‘ஜன நாயகன்’ படத்திற்கு பின்னால் இருந்த சவால்கள்… மனம் திறந்த‌ தயாரிப்பாளர் கே.வெங்கட் நாராயணா!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜன நாயகன்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் பல சவால்களை எதிர்கொண்டதாக தயாரிப்பாளர் கே.வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “படத்தை தயாரிப்பது சிரமமாக இல்லை. ஆனால் வெளியீட்டிற்கு முன் எதிர்பாராத பிரச்சனைகள் தொடர்ச்சியாக வந்தன. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதைவிட, ஏப்ரல் மாதத்திலேயே முழுப் படம் இணையத்தில் கசிந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.

மேலும், சான்றிதழ் கிடைத்த பிறகு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை ஒருங்கிணைத்து சரியான தேதியில் படத்தை வெளியிடுவதுதான் முக்கிய பணியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.இது விஜய் சாரின் கடைசி படம் என்பதால், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த முயற்சிதான் இன்று நல்ல வரவேற்பாக மாறியுள்ளது” என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading