பைக்கை ஓட்டி சாகசம் செய்யும் வீடீயோவை வெளியிட்ட நடிகை பார்வதி!

மலையாள நடிகை பார்வதி கடந்த ஆண்டு ‘தங்கலான்’, ‘உள்ளொழுக்கு’ உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு அவரது நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதே நேரத்தில், அடுத்த ஆண்டு வெளியாகும் வகையில் ‘பிரதம திருஷ்த்ய குற்றக்கார்’ மற்றும் ‘ஐ நோபடி’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், தனது 2025ம் ஆண்டு எப்படி சென்றது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் வீடியோ ஒன்றை பார்வதி வெளியிட்டுள்ளார். நெடுஞ்சாலையில் கம்பீரமான பைக்கை ஓட்டிச் செல்லும் அவர், ஓட்டும் போதே எழுந்து நின்றபடி சாகசம் செய்வதும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

இதுகுறித்து பார்வதி கூறுகையில், பைக்கர் ஆக விரும்பும் பெண்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் ‘CRPF Woman on Wheels’ அமைப்பிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading