ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ ஆகஸ்ட் 21 ரிலீஸ்…!

காதல் கதைகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் சிவா நிர்வாணா, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட கதையுடன் ‘இருமுடி கட்டு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘குஷி’ ஆகிய படங்களை தொடர்ந்து உருவாகும் இந்தப் படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர், ‘காவேரி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஆன்மிகமும் குடும்ப உணர்வுகளும் கலந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் பழகியிருக்கும் வழக்கமான மாஸ் ரவி தேஜாவை விட, வேறுபட்ட மனிதனின் வாழ்க்கைப் பயணமே இதில் சொல்லப்படுகிறது.

கதையில், மகளை உயிராக நேசிக்கும் தந்தை, சீக்கிரம் கோபப்படும் மனிதர், பின்னர் மகளின் வேண்டுகோளால் மது பழக்கத்தை விட்டு சுவாமி ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பக்தர் என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் ரவி தேஜா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ள நிலையில், விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘இருமுடி கட்டு’ வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading