இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் ஆஷிகா ரங்கநாத்… ஏன் தெரியுமா’?

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக பேசப்படும் ‘விஷ்வம்பரா’, ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகை ஆஷிகா ரங்கநாத், முதன்முறையாக மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரிஷா கதையின் முக்கிய மையமாக இருக்கும் நிலையில், ஆஷிகாவுக்கு சாதாரண இரண்டாவது நாயகி வேடம் அல்லாமல், படத்தின் முக்கியமான பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. ரிலீஸ் தேதி பலமுறை மாறியதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.சிரஞ்சீவி, திரிஷா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோரின் கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டாலும், படம் இன்னும் திரைக்கு வராதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அப்டேட் வரும் நாளைக்காகவே தற்போது பலரும் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply