அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்… யார் யார் தெரியுமா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘டேர்டெவில்’. பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கும் ஷாலினி அஜித்குமார், இதன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ‘விடாமுயற்சி’ படத்துக்குப் பிறகு அனிருத் மீண்டும் அஜித்துடன் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 12-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வந்து, உலகளவில் சுமார் ரூ.250 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அப்படத்துக்குப் பிறகு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், தற்போது ‘டேர்டெவில்’ படத்தின் மூலம் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பவுள்ளார்.

Add a Comment

Leave a Reply