இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘அரசன்’. இப்படத்தின் கதை ‘வடசென்னை’ திரைப்படத்தின் கதையுலகுடன் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘அரசன்’ திரைப்படத்தின் வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் நிறைவடையாததால் தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இப்படம் சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தீபாவளியன்று ‘அரசன்’ படத்தின் சிறப்புப் புரோமோவை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புரோமோவில் பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிரடியான ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்றுள்ள அவர் புரோமோவில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
