நானி நடித்துவரும் ‘தி பாரடைஸ்’ படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உற்சாகப்படுத்தியுள்ளது. காரணம், நானி – கீர்த்தி கூட்டணி ஏற்கனவே ‘தசரா’ படத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த நட்பும் புரிதலும் தான் மீண்டும் இந்தப் படத்தில் அவரை கொண்டு வந்ததாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இந்தப் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மோகன் பாபு மற்றும் ராகவ் ஜூயல் எதிரணி கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இசையை அனிருத் அமைத்து வருகிறார்.1980-களின் செகந்திராபாத் குடிசைப்பகுதியை பின்னணியாகக் கொண்ட இந்த ஆக்ஷன் படத்தில், நானி இதுவரை நடித்திராத ‘ஜடால்’ என்ற மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நீண்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
