மனதை வருடும் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படத்தில் இருந்து வெளியான ‘கலங்காதே’ பாடல்!

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த திரில்லராக உருவாகி வருகிறது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகவும், படத்தில் இடம்பெறும் தனது மூன்று விதமான கெட்-அப்களிலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விஷால் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், படத்தின் புதிய பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. முதலில் வெளியான ‘நச்சிந்தி மச்சானே’ பாடலை ஏகாதசி எழுதிய நிலையில், மங்லி மற்றும் வேல்முருகன் இணைந்து பாடியிருந்தனர். தற்போது, படத்தின் மூன்றாவது பாடலான ‘கலங்காதே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு கருணாகரன் வரிகள் எழுதியுள்ளார்.

Add a Comment

Leave a Reply