45 வயதில் ஹாப்பி நியூஸ் சொன்ன நடிகை பத்மபிரியா… குழந்தையின் முதல் பிறந்தநாள் பதிவு வைரல்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் பத்மபிரியா. ‘மிருகம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்திலேயே ஜாஸ்மின் ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த பத்மபிரியா, 2022-ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தற்போது 45 வயதில் அவர் தாயாகியுள்ளார்.

தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பத்மபிரியா வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. குழந்தையின் கைகள் தனது ஆடையை பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “வாழ்க்கையின் 365 நாட்கள்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தாலும், குழந்தை பற்றிய எந்த தகவலையும் அவர் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது குழந்தையின் பிறந்தநாள் பதிவின் மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading