தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா), தனது 111-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் காக்கினாடா துறைமுகப் பகுதியில் நடைபெற்று வந்தபோது, பிரமாண்ட சண்டைக் காட்சியில் டூப் கலைஞரை பயன்படுத்தாமல் நடித்த பாலகிருஷ்ணா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
—
