தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண், சமீபத்தில் ‘பெத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வலது கை மணிக்கட்டில் காயமடைந்தார். ஆரம்பத்தில் சிறிய அளவிலான சிகிச்சை பெற்று தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், பின்னர் அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஐதராபாத்திலிருந்து கோவைக்கு வந்தார். அவருடன் தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனாவும் வந்திருந்தனர். இன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வாரங்கள் ஓய்வு எடுத்த பின் வழக்கமான பணிகளை தொடரலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Add a Comment
